தோனியின் 42-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஹைதராபாத்தில் ரசிகர்கள் 52 அடி கட்அவுட் வைத்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, நாளை ஜூலை 7 ஆம் தேதி தனது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள தோனிக்கு ரசிகர்களின் வாழ்த்துமழை இன்று முதலே தொடங்கியுள்ளது என்று கூறலாம்.
இந்திய அணிக்காக ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் பெற்றுத்தந்த உலகக்கோப்பை நாயகனுக்கு நாளை 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ரசிகர்கள் வழக்கமாக தங்களது அன்பை வெளிப்படுத்துவது உண்டு, அதேபோல் இன்று ஹைதராபாத்தில் தோனியின் ரசிகர்கள் அவருக்கு 52 அடி மிகப்பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeதோனி இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் தொடரில் இன்னமும் ரசிகர்களின் அன்பிற்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி சாம்பியன் படம் வென்றிருந்தது, அப்போது கூட தனது ஓய்வு முடிவு குறித்து உறுதியான தகவல் ஏதும் அவர் சொல்லவில்லை. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
