அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், சட்ட ஆலோசகர் எனவும் பல பதவிகளில் முக்கிய பங்காற்றியவர் பி.எச்.பாண்டியன். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வருத்தத்தை இரங்கல் தெரிவித்தனர்.
இவரது இறப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது இரங்கலை நேரில் சென்று தெரிவித்தார். சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பி.எச்.பாண்டியனுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு பின்னர் செய்தியாளர்கள் சந்திக்கையில் பி.எச்.பாண்டியன் சிறந்த வழக்கறிஞராக பணியாற்றினார். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே அரசியலில் அதிமுகவிற்கு பங்காற்றி வருகிறார். கழக சட்ட ஆலோசகராக இருந்துள்ளார். எம்எல்ஏவாகவும், அதிமுக எம்பி குழு தலைவராகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
அரசியலில் தனி முத்திரை பதித்தவர். இவரது இழப்பிற்காக அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.’ என தனது இரங்கலை தெரிவித்து விட்டு சென்றார்.
திருவனந்தபுரம் : கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற…
கொச்சி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு இன்று மிக…
கோயம்புத்தூர் : நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் பைனலுக்கு இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,…
டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி)…