நெல்லை ஆணவக் கொலை: “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” – மாரி செல்வராஜின் பதிவு.!
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளா.

சென்னை : நெல்லை ஆணவக் கொலை “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ், சாதிய அருவருப்பு மற்றும் அதன் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
அந்த வகையில், தற்போது அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவில், திருநெல்வேலியில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்திற்கு எதிரான அவரது கண்டனத்தையும், சாதிய அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வலியுறுத்தினார்.
நீளும்
சாதிய அருவருப்பின்
அட்டூழியம் …
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்.@CMOTamilnadu @mkstalin @Udhaystalin pic.twitter.com/1MAlKzZHCz— Mari Selvaraj (@mari_selvaraj) July 29, 2025
இதனிடையே, இயக்குநர் மாரி செல்வராஜ், தனது திரைப்படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகியவற்றில் சாதிய அநீதிகளையும் சமூகப் பிரச்சினைகளையும் தொடர்ந்து எடுத்துரைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.