காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது.

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகளை அறிவித்துள்ளார். அதன்படி, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் 2025 இல் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
காலாண்டு தேர்வு:
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி காலாண்டு தேர்வு துவங்குகிறது. செப்டம்பர் 26ம் தேதியுடன் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நிறைவடையும். இதற்கு அடுத்தபடியாக காலாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டும்.
அரையாண்டு தேர்வு:
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15ல் தொடங்கி டிசம்பர் 23ல் நிறைவடையும். மேலும் தேர்வுக்கு முன் உள்ள அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத்… pic.twitter.com/9D0uV89OGk
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 29, 2025