உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 926 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.
உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காளைகளும் காளையர்களும் சரி நிகராக விளையாடி வரும் இந்த களத்தில் யாருக்கும் அஞ்சாமல் திமிலை காட்டி தொட்டுப்பாரு என்று திமிராக ஒரு காளை வீரர்களுக்கு சவால் விடும் வகையில் மிரட்டியது.இதே காளை தான் அவனியாபுர ஜல்லிக்கட்டிலும் மிரட்டியது.
இன்றைய போட்டியில் இக்காளையை யாராலும் தொடக் கூட முடியவில்லை. நீண்ட நேரம் மைதானத்தில் நின்று விளையாடி ஆட்டம் காட்டி அனைவரையும் கவர்ந்தது.இதே போல் தான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9 நிமிடம் களத்தில் விளையாடி யாராலும் பிடிக்க முடியாததால் சிறந்த காளையாக பரிசு பெற்றது.இந்நிலையில் அவனியாபுரத்தை தொடர்ந்து, அலங்காநல்லூரிலும் களத்தில் நின்று ஆடி, வீரர்களை மிரள வைத்தது.யார் காளை இந்தக் காளை என்று பார்த்தால் அது புதுக்கோட்டை சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளை ராவணன் என்று தெரியவந்தது.பெயருக்கு ஏற்றாற்போல் களத்தில் ஒரு வீரரையும் நெருங்க விடாமலும் நெருங்கிய வீரர்களை தூக்கி எரிந்தும் ஆட்டம் காட்டியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ராவணனின் ஆட்டத்தை பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வகின்றனர்.அந்த வீடியோ..இதோ
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…