நடிகர் விஜய்க்கு ரசிகர் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.ரசிகப்பட்டாளம் அதிகமுள்ள நடிகர்களில் இவரும் ஒருவர்.நடிகர் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜயை தான் அரசியலுக்கு வர வேண்டும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விஜய் தனது ரசிகர் மன்றத்திற்கு பதிலாக மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறார் இதன் மூலம் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.தமிழகம் முழுவதும் இந்த இயக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேட்தல் நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளிவந்தது. அந்த முடிவில் தான் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றியை ருசித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த வெற்றி மூலம் நடிகர் விஜய் ரசிகர்களின் அரசியல் கணக்கு ஆரம்பமாகி உள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் ஆரங்கூர் கிராம ஊராட்சியின் 8வதுவார்டு உறுப்பினராக விஜய் மக்கள் இயக்க ஒன்றிய விவசாய அணி செயலாளர் லோகேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் கிராம ஊராட்சியின் 5வது வார்டு உறுப்பினராக அந்த இயக்கத்தின் மகளிரணி நிர்வாகி சங்கீதா தேர்வாகி உள்ளார். திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநெடுங்குளம் கிராம ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினராக விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினரான சரவணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜன.,6ல் அந்தந்த பதவிகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.வெற்றிப்பெற்ற இவர்களை அந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் பாராட்டினார்.திரையில் தான் அரசியல் கணக்கு போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசியலுக்கு பிள்ளையார் சுழியை விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டுள்ளோம் என்று விஜய் ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…