தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது.
காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான மேற்பார்வைகுழு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் தென்மண்டல காவல் துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரன் மேலும் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், ஆகியோர் தலைமையின் கீழ் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
பாயும் காளைகளையும்-காளையர்களையும் கண்டு களிக்க பார்வையாளர்களுக்கு வசதியாக பேரிகார்டுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் போட்டியில் பங்கேற்பதற்காக 700 காளைகளும், 936 காளையர்களும் களத்தில் உள்ளனர்.ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பங்கேற்று உள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்னதாக முதலில் கோவில் காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும்.அவ்வாறு அவிழ்த்து விட்ட பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்ட பிறகு தான் காளைகளை பிடிக்க மாடு பிடிவீரர்கள் களம் இறங்குவார்கள் இவ்வாறு களம் இறக்கப்பட்டு வரும் நிலையில் பல சுற்றுக்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது 4 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் பதிவுச்செய்யப்பட்ட காளைகள் இருப்பதால் தற்போது 4.30 மணிவரை ஜல்லிக்கட்டிற்கு கூடுதல் அரை மணி நேரத்தை கண்காணிப்பு குழு அளித்துள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…