திருச்சி மாவட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்டது ஒட்டம்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் மூன்று சாலைகள் சந்திக்கும் மந்தை உள்ளது இது அரசுக்கு சொந்தமான பொது இடம் ஆகும். இந்த இடத்தில் 5 அடி உயரத்தில் சுதையால் தயாரிக்கப்பட்ட மற்றும் தங்க நிற வண்ணப்பூச்சு அடிக்கப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலை முன் அனுமதி பெறாமலே நேற்று இரவு நிறுவப்பட்டது.
அனுமதியின்றி நிறுவப்பட்ட தகவலறிந்து அங்கு வந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமார், மற்றும் துறையூர் வட்டம் காவல் ஆய்வாளர் குருநாதன் உள்ளிட்டோர் உடன் உப்பிலியபுரம் போலீஸாரும் விரைந்தனர்.அவர்களோடு துறையூர் வட்டாட்சியர் அமுதா அவருடன் வருவாய் துறையினர் இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் ஒட்டம்பட்டிக்கு சென்றனர்.
இந்நிலையில் முன் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட சிலையை போலீசாரின் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் அகற்றினர்.அவ்வாறு அகற்றப்பட்ட அச்சிலையை உப்பிலியபுரத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனை அடுத்து முன் அனுமதியின்றி சிலை வைத்தவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…