5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தையின் உணவுகுழாயிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அடுத்து உள்ள கொழுந்தம்பட்டு எனும் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் ஒரு வயது மகள் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இந்நிலையில் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் சென்றுள்ளனர்.
குழந்தையின் கழுத்து பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது உணவுக்குழாயில் அந்த ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உடனடியாக மருத்துவ குழுவினர் இணைந்து குழந்தைக்கு சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல் டியூப் மூலமாக நாணயத்தை வெளியில் வெற்றிகரமாக எடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…