தமிழகத்தில் மேலும் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதி.!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவருகின்றனர். கொரோனாவால் இருவர் பலியாகியுள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் தவிர சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாம்.