13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம்!

13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம்.
நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், கோவை ஓண்டிபுதூர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றிய 13 வயது சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் தாக்கி உள்ளார்.
இவர் லத்தியால் தாக்கியதில், அந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிங்காநல்லூர் காவல்நிலைய காவலர் துர்காராஜ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025