#ELECTIONBREAKING: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் திருத்தம் – தினகரன் அறிவிப்பு..!

M.சந்தோஷ்குமார் அவர்களுக்கு பதிலாக அவரது மனைவி திருமதி.S.சங்கீதப்ரியா சந்தோஷ்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) நிறுத்தப்படுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அமமுக சார்பில் இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், தற்போது அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, இன்று 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இன்று வெளியான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06 04. 2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திரு M.சந்தோஷ்குமார் அவர்களுக்கு பதிலாக அவரது மனைவி திருமதி.S.சங்கீதப்ரியா சந்தோஷ்குமார் அவர்கள் (வத்திராயிருப்பு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்டம்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் – 2021
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக
இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் – திருத்தம் pic.twitter.com/C6wO4kfI4g— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025