பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு – டிஜிபி சைலேந்திரபாபு..!
சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் குற்றம் நடைபெறாமல் தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தமிழகத்தின் 30-வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிபியாக பதவியேற்றதில் மகிழ்ச்சி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஒரு அரிய சந்தர்ப்பம். காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். மனித உரிமைகளை மதித்து நடப்பதற்கான பயிற்சியும் காவல்துறையினருக்கு அளிக்கப்படும். காவலர்களின் குறைகளையும் கேட்டு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் குற்றம் நடைபெறாமல் தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு என தெரிவித்தார்.