கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த 13 வயது சிறுமி கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் காணவில்லை என அவரது பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் சிறுமியின் வீட்டின் அருகில் இருந்த கலைச்செல்வி மற்றும் குமுதவல்லி வேலை வாங்கி தருவதாக கூறி திருப்பூர் அழைத்து சென்று கல்பனா ,சந்தான மேரி , மணி ஆகியோருடன் பாலியல் தொழிலில் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கலைச்செல்வி , குமுதவல்லி ,கல்பனா ,சந்தான மேரி ,மணி உட்பட 7 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.இந்த வழக்கு கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கலைச்செல்வி , குமுதவல்லி ,கல்பனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ,சிவகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கினார்.சந்தான மேரி ,பிரதாப் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாதததால் அவர்களை விடுதலை செய்தனர்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…