தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களும், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து அவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மேலும் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செய்யப்பட்ட காரணத்தால் தஞ்சை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
அதன்படி, முன்னாள் எம்பி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கு.பரசுராமன், எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் கோ.ராஜ்மோகன், தஞ்சை நகர கழக செயலாளர் வி.பண்டரிநாதன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர்எம் பாஸ்கர், ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அருள் சகாயகுமார் ஆகிய 5 பேர் இன்று முதல் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளனர்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…