விமான சாகச நிகழ்ச்சி.! 5 பேர் உயிரிழப்பு.! சிகிச்சை பெற்றுவருவோர்களின் நிலை.?
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை : மெரினா கடற்கரையில் நேற்று விமானப்படை சாகச நிகழ்ச்சி கொண்டாட்டமாக தொடங்கி சோகமான நினைவுகளை கொடுத்துவிட்டது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ரபேல் , தேஜஸ் உள்ளிட்ட 72 வகையான விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
விமானப்படை சாகச நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை சென்னை மெரினா போன்ற சுற்றுலா தளத்தில் நடைபெற்றதால் மக்கள் அதிகளவில் ஒரே இடத்தில் கூடினர். சாகச நிகழ்ச்சி காலை 11 மணிமுதல் 1 மணி வரை நடைபெற்றது. அந்த சமயம் வெயிலின் தாக்கம், கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் மயக்கடைந்தனர்.
மயக்கமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள தற்காலிக மருத்துவ மையங்களில் முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 90க்கும் அதிகமானோர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை , ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இதில், 5 பேர் இதுவரையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 34), ஆந்திராவை சேர்ந்த தினேஷ்குமார் ( வயது 37), கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் பாபு (வயது 56), பெருங்களத்தூரை சேர்ந்த சீனிவாசன் (வயது 52), மேலும் , 55 வயது நபர் ஒருவரும் இந்த கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில், 10 பேர் மட்டும் உள்நோயாளிகளாக மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025