அதிமுகவில் இருந்து 7 பேர் நீக்கம் – ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி..!

Published by
லீனா

தேனீ மாவட்டத்தில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினாலும், கட்சியில் இருந்து 7 பேரை நீக்கம் செய்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி,

  • திரு. R. ஜெகதீசன், (சின்னமனூர் நகர 10-ஆவது வார்டு கழகச் செயலாளர்,நகர மன்ற வார்டு உறுப்பினர் )
  • திருமதி S. உமாராணி, (சின்னமனூர் நகர மன்ற 13-ஆவது வார்டு உறுப்பினர்)
  • திருமதி T. கவிதா ராணி, (சின்னமனூர் நகர மன்ற 14-ஆவது வார்டு உறுப்பினர்)
  • திரு. V. பிச்சை கணபதி, (சின்னமனூர் நகர மன்ற 18-ஆவது வார்டு உறுப்பினர் )
  • திருமதி M. செல்வி, (சின்னமனூர் நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி, நகர மன்ற 22-ஆவது வார்டு உறுப்பினர் )
  • திரு. T.தவசி., (சின்னமனூர் நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர், நகர மன்ற 26-ஆவது வார்டு உறுப்பினர்)
  • திரு. P.ராஜேந்திரன், (திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டவர்) (சின்னமனூர் நகரக் கழகச் செயலாளர் ) ஆகியோர்,

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Recent Posts

நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!

நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!

சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…

14 minutes ago

”அன்றே செத்துவிட்டேன்”.., அன்புமணி குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பிய ராமதாஸ்.!

சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…

50 minutes ago

பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!

சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…

1 hour ago

”தாயை அடிக்க முயன்றவர்.., வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து” – ராமதாஸ் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு.!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…

1 hour ago

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார் – திரை பிரபலங்கள் இரங்கல்.!

சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக…

2 hours ago

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.?

சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…

4 hours ago