தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 7,427 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,29,924 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 439 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 189 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,386 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 15,281 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,37,209 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,70,923 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,13,40,264 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 61,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…