தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு.
தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்கள் 2023 வரை பணி நீட்டிப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016-17 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரமுயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 19 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 95 (19×5) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டும் ஆணைகள் வெளியிடப்பட்டன.
இப்பணியிடங்களுக்கு 14.01.2018 முதல் 31.12.2020 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக தாமுயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட நீட்டிப்பு 31.12.2020 உடன் முடிவடைந்ததால், இப்பணியிடங்களுக்கு 01.012021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை பரிசினை செய்து 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பர் வரை 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…