ஆளுநருக்கு கருப்புக்கொடி – அரசியல் கட்சிகள் முடிவு!

RN RAVI

சிதம்பரம் சென்றுவிட்டு திரும்ப செல்லும்போது ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு.

இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு யோகா செய்தார். இந்த நிலையில், யோகா நிகழ்ச்சியை முடித்துவிட்டு  இன்று கடலூர் வழியாக செல்லும் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதில் ஆர்என் ரவி, தமிழக அரசுக்கு எதிராகவும், அரசு இயற்றும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருவதாலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் மற்ற தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சமயத்தில், இன்று சிதம்பரம் சென்றுள்ள ஆளுநர், யோகா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பி கடலூர் வழியாக செல்லும்போது, கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்