ஜல்லிக்கட்டு காளைக்கு உணவாக உயிருடன் சேவல் – போலீசார் வழக்கு பதிவு!

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடத்தபடும். அதிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்ளீட்டு அமைப்புகள் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளனர். அந்த வழக்குகளை தாண்டி தற்போது கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு காளைக்கு வலுக்கட்டாயமாக சேவல் ஊட்டுவது போன்ற வீடியோ ஒன்றை யூடியூபர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, சேலம் மாவட்டம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அதாவது, சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் இந்த சம்பவம் அரங்கேரியுள்ளது. ரகு என்பவரின் சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்ட 2.48 நிமிட வீடியோவில், மூன்று பேர் காளையை பிடித்துக்கொண்டும், மற்றொருவர் ஜல்லிக்கட்டு காளைக்கு உயிருடன் இருக்கும் சேவலை ஊட்டுவதையும் காட்டுகிறது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ காமதேனு சேனலில் இருந்து பெறப்பட்டது. (நன்றி)
இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியதையடுத்து, பீப்பிள் ஃபார் கேட்டில் எய்ம் இந்தியா (பிஎஃப்சிஐ) நிறுவனர் அருண் பிரசன்னா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூர் – கீழக்கரை ஜல்லிக்கட்டு.! மதுரை மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு.!
இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறை ஆய்வாளர் கூறுகையில், “வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரித்து வருகிறோம். நாங்கள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை “என தெரிவித்தார். புகார்தாரரான அருண் பிரசன்னா தனது புகாரில், “இது உயிருள்ள சேவல் மற்றும் காளை இரண்டையும் கொடுமைப்படுத்துகின்றனர். காளை, தாவரவகை விலங்கு என்பதால், கோழியை சாப்பிட கட்டாயப்படுத்துவது கற்பனை செய்ய முடியாதது. எனது ஒரே பயம் இது ஒரு மோசமான போக்கை மாறிவிடும் என்பதுதான். இந்த காளை வென்றால், பல காளை உரிமையாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்” என கூறினார்.
இந்த செய்தி free press journal சேனலில் இருந்து பெற்றப்பட்டது. ( நன்றி )
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025