கள்ளச்சாராயம், உயிரிழப்புகளை தடுக்க தவறிய அரசைக் கண்டித்து பாஜக சார்பில் 20 ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டம்.!

கள்ளச் சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன போராட்டம்.
தமிழகத்தில் தாராளமாக நடைபெறும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அவற்றால் பரிதாபமாக நடந்த உயிரிழப்புகளையும் தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 20 ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும், மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் @BJP4Tamilnadu வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்த…
— K.Annamalai (@annamalai_k) May 18, 2023
/p>