#JustNow : சாத்தூர் அருகே பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து…ஒருவர் பலி.!!

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு கடையில் திடீரென இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகிறார்கள். மேலும், தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறி வருவதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணமாக இன்னும் தெரியவரவில்லை, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த வெடிவிபத்தில் இரண்டு பேர் கடை உள்ள சிக்கி உள்ள நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடையின் உள்ளே சிக்கியுள்ள ஒருவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.