குடிபோதையில் மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, காலேகுண்டா தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தையும், 7 மாத கர்ப்பிணி மனைவியும் உள்ளார். இந்நிலையில், வெற்றிவேல், உயிரோட உள்ள மீனை விழுங்க போவதாகவும், நண்பர்களை வீடியோ எடுக்குமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து, வெற்றிவேல் மீனை உயிருடன் விழுங்கிய போது, அந்த மீன் அவரது சுவாச குழாயில் சிக்கியது. இதனையடுத்து, வெற்றிவேல் மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு அதிக லைக்குகளை பெற வேண்டும் என, குடிபோதையில் வெற்றிவேல் செய்த விளையாட்டான காரியம் விபரீதமாக முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…