,

சாதாரண லீவ் லெட்டர்.. எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு..!!

By

தீபக் என்ற மாணவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார் இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி படித்து வருகிறார். இவரது தந்தை விஜயராகவன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். தற்போது நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணை எடுத்துள்ளார்.
மாணவன் தீபக் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவன் தனது வகுப்பு ஆசிரியருக்கு விடுப்புக் கடிதத்தில் எங்கள் ஊரில் நேற்று கபடி போட்டி நடந்து வந்தது அங்கு சென்று விட்டான் இரவு முழுவதும் கண் விழித்து பார்த்ததால் உடல் சோர்வாக உள்ளது எனவே எனக்கு ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
விடுமுறைக்காக பல பொய்கள் கூறி விடுமுறை எடுக்கும் மாணவர்கள் மத்தியில் இப்படி ஒரு நேர்மையான மாணவனா!.என்று ஆசிரியருக்கு மத்தியில் சிறந்து விளங்குகிறான் இதையடுத்து மாணவன் தீபக்குக்கு பள்ளி வகுப்பு ஆசிரியர் மணிமாறன் விடுப்பு அளித்துள்ளார்.மாணவன் விடுமுறை கேட்டு எழுதிய கடிதத்தை கண்டு ஆசிரியர் பெருமக்கள் பாராட்டியுள்ளார்கள்.

Dinasuvadu Media @2023