மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவுப்புக்கு தடை விதிக்கக்கோரி அப்துல் என்பவர் மதுரை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த மனுவில், மாணவர்கள் கண்டிப்பாக வகுப்புக்கு வர வேண்டும் என்று சில பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.
இன்னும் 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. கொரோனா அலை இன்னும் முழுமையாக முடியாத நிலையில், மூன்றாவது ஏற்பட்டால் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல பள்ளிகள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு தலைமையில் வந்தபோது, மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கட்டாயப்படுத்திய பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்ததால் அவற்றின் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு, வழக்கை விசாரணையை செப்டம்பர் 30க்கு ஒத்திவைத்தனர் என்பது குறிப்பித்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…