South TN Rains - TN Govt [file image ]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் இருளில் வசித்து வரும் நிலையில், தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சிவ்தாஸ் மீனா இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் மின்சாரம் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு, நிவாரப்பணிகளை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்டுகிறது.
கனமழை எதிரொலி.! நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் கொடுத்துள்ளார்.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…