கொரோனா மருந்தை கண்டுபிடித்தது மோடி.? பிரச்சாரத்தில் குதித்த செந்தில்..!

Published by
மணிகண்டன்

PM Modi : கொரோனாவுக்கு மருந்து பிரதமர் மோடி பொறுப்பில் இருந்ததால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், அரசியல் தலைவர்கள் , வேட்பாளர்கள் மட்டுமல்லாது நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதனால் தற்போது தான் தமிழக தேர்தல் களம் என்பது களைகட்ட ஆரம்பித்துள்ளது.

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பாஜக நட்சத்திர பேச்சாளர் நடிகர் செந்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். இவர் முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்து இருந்தார்.

இவர் பேசுகையில், நான் முதலில் அதிமுகவில் இருதேன். அதிமுகவுக்கு சேவல் சின்னம் கொடுக்கப்பட்டது முதல் நான் இருந்தேன். அப்போது எடப்பாடி பழனிச்சாமி கிடையாது. 1989க்கு பிறகு தான் எனக்கு பின்னால் வரிசையில் வருகிறார். அப்போது இருந்தே இருக்கும் அடிமட்ட தொண்டனாகிய எனக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் தான் இங்கு (பாஜக) வந்துள்ளேன்.

பிரதமர் மோடி மட்டும் இல்லை என்றால் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்க முடியாது. கொரோனா தடுப்பூசியெல்லாம் மோடி ஐயா தவிர உலகில் வேறு யாராலும் கண்டுபிடித்து இருக்க முடியாது என பிரதமர் மோடி ஆட்சியில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊசி தான் அமெரிக்கா வரையில் ஏற்றுமதியானது என்றும் குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால்  இங்குள்ள மக்கள் அதிகம் பேர் உயிரிழந்து இருப்பர் . கச்சத்தீவு மோடி ஐயா இருந்து இருந்தால் இலங்கைக்கு போயிருக்காது. இப்போ கூட அவர் நினைச்சா கச்சத்தீவு இங்க வந்துரும் என கூறி தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார் நடிகர் செந்தில்.

மேலும், தமிழகத்தில் பழனி முருகன், நீலகிரியில் எல்.முருகன் (பாஜக வேட்பாளர்), இங்கு பிரச்சாரம் செய்ய வந்து இருப்பது செந்தில் முருகன் என ரைமிங்கில் பேசியும் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார் நடிகர் செந்தில்.

Recent Posts

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

43 minutes ago

INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

1 hour ago

“என்னை கொல்ல முயற்சி” தீராத விளையாட்டுப் பிள்ளை நடிகை பகீர் புகார்!

மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…

2 hours ago

திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!

சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…

3 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…

4 hours ago

தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப்…

4 hours ago