நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் பாஜகவில் இணைந்தார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக பாஜக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. எனவே மக்கள் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் கட்சியின் பக்கம் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது.

நடிகர் விஜயகுமார், நமீதா, கஸ்தூரி ராஜா, பொன்னம்பலம், ராதாரவி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள போவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இன்று சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த ராம்குமார் கட்சியின் தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து பேசிய பின்னர் பாஜகவில் இணைந்தார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியை தழுவி இருந்தாலும், நான் தற்போது பிரதமர் மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைக்கிறேன் என்று மாநில தலைவர் எல் முருகனின் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் பாஜகவில் இணைவது குறித்து சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரும், காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவருமான சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சித் தலைவராக, காமராஜரின் சீடராக, பக்தராகக் கடைசிவரை வாழ்ந்து மறைந்த சிவாஜியின் புதல்வர், பாஜகவில் இணைவது எந்த வகையிலும் சிவாஜியின் புகழுக்குப் பெருமை சேர்க்காது என குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

2 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago