நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் .நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில் நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பா.ஜ.க. அரசு கருதுமேயானால் அது வெறும் பகல் கனவாகத் தான் முடியும்.இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…