கோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்..!

Published by
murugan

கோவை மாவட்டத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கடந்த 5 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது.

  • பிரசித்தி பெற்ற 4 கோயில்களில் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை.
  • அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
  • அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.மேலும்,உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை அனுமதி.
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி.ஆனால்,மார்க்கெட்களில் சில்லறை விற்பனைக்கு தடை.
  • உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.
  • கிராஸ்கட் சாலை,100 அடி சாலையில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமை கிழமைகளில் இயங்க தடை.
  • கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு.
  • கேரளாவிலிருந்து வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by
murugan

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!  

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

30 minutes ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

1 hour ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

5 hours ago