Adidas [Getty Images / Spencer Platt]
உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பின் பிரபல நிறுவனமான “அடிடாஸ்” நிறுவனம், சீனாவுக்கு பிறகு இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அதாவது, தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு… ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டம்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் நிறுவனம், இந்தியாவில் முதல்முறையாக தனது உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது. அதன்படி, சென்னைக்கு அருகே அடிடாஸின் “globlal capacity center” திறன் மேம்பாட்டு மையம் அமையவுள்ளது.
ஆசிய கண்டத்திலேயே சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவில் அமையும் முதல் அடிடாஸ் நிறுவனம் இதுவாகும். போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மையங்களுடன் இணைந்து சென்னையில் அமைய உள்ள மையம் செயல்பட உள்ளது. காலணி மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக (R&D) இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…