பெற்றோர்கள் கவனத்திற்கு..! தனியார் பள்ளிகளில் இலவச கல்வி… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…

Published by
மணிகண்டன்

RTE : தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

கல்வியை அடிப்படை உரிமையாக கொண்டுள்ள நமது நாட்டில் அனைத்து குழந்தைகளும் அரசு – தனியார் என எந்த பாகுபாடுமின்றி கல்வியை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி உரிமை சட்டம் (RTE – Right to Education Act) கடந்த ஆகஸ்ட் 4, 2009இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. 2013ஆம் ஆண்டு இந்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 6 முதல் 14 வயது வரையில் (1 முதல் 8ஆம் வகுப்பு வரை) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை எந்தவித கல்வி கட்டணமும் இன்றி பள்ளியில் சேர்க்கபடுவர். இதற்காக rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.  இதற்கான கட்டணத்தை மாநில அரசு, தனியார் பள்ளிகளுக்கு அளிக்கும்.

இன்று (ஏப்ரல் 22) முதல் மே மாதம் 20ஆம் தேதி வரையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான  தனியார் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோர்கள் உரிய ஆவணங்கள் கொண்டு விண்ணப்பித்த உடன், அவர்கள் மொபைல் எண்ணிற்கு SMS குறுஞ்செய்தி வரும். பள்ளிகளுக்கு அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் இறுதியில் குலுக்கல் அல்லது முன்னுரிமை முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

RTE மாணவர் சேர்க்கை மூலம் தமிழகத்தில் சுமார் 8 ஆயிரம் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இதுவரையில் சுமார் 4.6 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

 

Published by
மணிகண்டன்

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

3 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

35 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

43 minutes ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago