விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!

அத்தியாவசிய உயர்வு குறித்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில், காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் ஜெயக்குமார், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம். மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா பங்கேற்றுள்ளனர்.