குடும்பத்தின் கைக்குள் கட்சி செல்வதை விரும்பவில்லை..!ஒற்றை தலைமை வேண்டும்..!வெடிக்கிறது எதிர்ப்பு

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது.ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராஜன் செல்லப்பாவின் கருத்து சரியானதே என்று ஒற்றை தலைமைக்கு மேலும் ஒரு எம்எல்ஏவான குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்து சரியானதே அதிமுக அரசுக்கு ஒருபோதும் எம்எல்ஏக்கள் துரோகம் செய்ய மாட்டார்கள்.
ஆனால் தனது மகனுக்காக ஓபிஎஸ் பதவி கேட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியது ஒரு குடும்பத்தின் கைக்குள் கட்சி செல்வதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.குடும்பத்திற்காக கட்சியை வளைக்க நினைப்பது வேதனை அளிக்கிறது.
தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அவரது நிலைப்பாட்டில் இருந்து மாறி, மகனுக்காக செயல்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
மேலும் அவர் பேசுகையில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், உட்கட்சி பூசலை ஏற்பட்டுத்த பேசவில்லை வருத்தத்தை பதிவு செய்கிறேன்.என்று தெரிவித்ததோடு அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்பது எங்களது கோரிக்கை என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் அதிமுக கட்சிக்குள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றை தலைமை குறித்து இருவரின் குரலா அல்லது ஒட்டுமொத்த அதிமுகவின் குரலாக ஒலிக்கிறதா..?என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.