மூன்று மாவட்டங்களின் எல்லைகளை சீல் வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க இந்தியாவில் 75 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என நேற்று மத்திய அரசு ஆலோசனை வழக்கியுள்ளது.
அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.மத்திய அரசின் பரிந்துரையை தொடர்ந்து மூன்று மாவட்டங்களின் எல்லைகளை சீல் வைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் , மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025