கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, திருச்சி ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் மரணம், தமிழகத்தையே கலங்க வைத்தது. இந்த சோக வடுக்கள் மறைவதற்கு முன்பதாக அடுத்தடுத்து 4 பிஞ்சு குழந்தைகளின் உயிரிழந்துள்ளனர். இந்த குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் பெற்றோர்களின் அலட்சியம் தான் என்பதில், எந்த வித மாற்று கருத்தும் இல்லை.
தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே லிங்கேஸ்வரன் – நிஷா தம்பதியினரின் குழந்தை ரேவதி சஞ்சனா. இந்த தமபதியினர், தங்களது தொலைக்காட்சி பெட்டியின் மீது செலுத்திய கவனத்தை, தங்களது குழந்தையின் மீது செலுத்த தவறி விட்டனர். இந்த குழந்தையின் பெற்றோர் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது, தண்ணீர் கேனிற்குள் தலைகுப்புற விழுந்து, மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று, கடலூர் மாவட்டம், பண்டாரம்கோட்டை என்ற ஊரை சேர்ந்த மகாராஜன் – பிரியா என்பவர்களின் மகள் பவளவேனி. பிரியா அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணததல், குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அக்குழந்தை வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. குழந்தை விழுந்த சம்பவம் அவர்களது உறவினருக்கு நீண்ட நேரம் தெரியாமலே இருந்துள்ளது.
இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ராஜசேகர் என்பவற்றின் 2 வயது குழந்தை பிரசாந்தும், அவரது உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர்கள் வீரபாண்டியன்- ரம்யா தம்பதியினர். இவர்கள் வேலைக்கு சென்ற போது, தனது 2 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, தனது கடைசி குழந்தையை பாட்டி வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த மூதாட்டி துணியை துவைத்து கொண்டிருந்த போது, 4 வயதான குழந்தை யுவந்திகா, நாற்காலியில் ஏறி, 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனை எட்டிப்பார்த்த போது, கேனில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுஜித்தின் மரத்திற்கு பின் இறந்த அத்தனை குழந்தைகளுமே பெற்றோரின் அலட்சியமே காரணம்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…