தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி என மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதிமுக, பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது. ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், பாஜகவுக்கு 4 அல்லது 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன்பின் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு வருவதால், பாஜக தரப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது. அதிமுக தலைமை மீது எந்த வருத்தமும் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் நான் மிகவும் விரும்பும் தலைவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் பொது எதிரி திராவிட முன்னேற்றக் கழகம் தான். பாஜக தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி, தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஹனித்துப்போட்டி என்பதால் அதிமுகவுடன் முறிவு என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜாகாபின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…