#ELECTIONBREAKING : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! எடப்பாடி தொகுதியில் மீண்டும் முதல்வர் போட்டி..!

Default Image

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், தேனி மாவட்டம் போடியில் ஓ. பன்னீர்செல்வமும் போட்டியிட உள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கி மார்ச் 3-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்க்கப்பட்டது.

அதிமுக சார்பில் போட்டியிட 8,200 பேர் விருப்பமனுக்கள் அளித்தனர். அவர்களிடம் நேற்று ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்தது. இந்நிலையில், அதிமுக சார்பில் வெளியிட்டபட்டுள்ள அறிக்கையில்,  முதற்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடம் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், தேனி மாவட்டம் போடியில் ஓ. பன்னீர்செல்வமும், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரும், விழுப்புரத்தில் சி.வி சண்முகமும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் சண்முகநாதனும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழி போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Thoothukudi Perumal Temple
Kulasekaranpattinam Surasamhara festival_11zon
Vijayadashami 2024
K.K.S.S.R.Ramachandran
Air India Express Flight
Train Accident - Rahul Gandhi