சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்தும், கூட்டணி பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாகவும், அதிமுக 50வது ஆண்டு விழா பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல், கூட்டணி, சசிகலா ஆடியோ விவகாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…