மத்திய அரசின் மானியத்தை பெற இயலாத அதிமுக அரசு – சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலம்!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலம். 

ஒரு அரசின் நிதி செலவினங்கள், கடன், லாபம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் இழப்பு எவ்வளவு என்று சிஏஜி அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படும். மத்திய அரசின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியிடப்படும். அதேபோல்  மாநில அரசுகளின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியாகும்.

மாநில அரசுகளின் சிஏஜி அறிக்கையை நிதி அமைச்சர் பொதுவாக சட்டசபையில் வெளியிடுவது வழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த 5 வருடமாக தமிழகத்தின் சிஏஜி அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் விரைவில் விளியிடப்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் 5 வருட சிஏஜி அறிக்கை வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில் வருவாய் மற்றும் பொருளாதாரப்பிரிவு குறித்த 2018 – 2019 மார்ச் வரையிலான சி.ஏ.ஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த அதிமுக ஆட்சியில் காலதாமதம் உள்ளிட்ட அலட்சிய நடவடிக்கைகளால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு பெற்று தரவேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது என அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கால தாமதத்தால், மத்திய அரசின் மானியம் ரூ.16.26 கோடி விடுவிக்கப்படவில்லை. ரயில்வே பால பணிகள் நிறைவு அறிக்கை அளிப்பதில் கால தாமதம் ரூ.120 கோடி நிலுவை தொகை பெறப்படவில்லை. தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதியை உரிய வகையில் பயன்படுத்தத்தால் ரூ.11.52 கோடி மானியத்தை பெற முடியவில்லை.

அரசின் ஒழுங்கு முறைகளை செயல்படுத்தாததால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.71.22 லட்சம் சேவை கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் பெறுவதில் கால தாமதம் என்றும் இதனால் ரூ.9.1 கோடி மானியத்தை பெற இயலவில்லை என சிஏஜி அறிக்கை மூலம் கடந்த அதிமுக ஆட்சியின் நிலை அம்பலமாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

5 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

6 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

7 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

8 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

9 hours ago