தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்- அதிமுக தலைமை அறிவிப்பு..!

Published by
murugan

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 28-ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் அடைப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.எல்.ஏ எஸ் .பி வேலுமணி ஆகியோர் இன்று காலை சந்தித்தனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் திமுக-வின் கையாளாகாத் தனத்தையும், ஆளும் திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்குத் தெளிவாகப் புரிகின்ற வகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக செய்திகளைத் தந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முதல் தகவல் அறிக்கையில் சொல்லி இருக்கும் எந்த சட்டப் பிரிவுகளின் கீழும், எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்தும்

பிணையில் வரமுடியாத அளவிற்கு தொடர் வழக்குகளை அவர் மீது புனைய முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 28-ஆம் தேதி  காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

Recent Posts

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

25 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

52 minutes ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

1 hour ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

2 hours ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

3 hours ago