உடைந்தது அதிமுக -புதிய தமிழகம் கூட்டணி ! இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை ! கிருஷ்ணசாமி அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டது.ஆனால் அங்கு தோல்வி அடைந்தது.இந்த நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்கு அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளது.
இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை.சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தோம்.ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025