அதிமுக – தமாகா கட்சிகள் இடையே இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதிமுக – தமாகா முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகா சார்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவை தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – தமாகா கட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. அதன்படி, தமிழ் மாநில காங்கிரசுக்கு 6 முதல் 7 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வால்பாறை, ஈரோடு மேற்கு, பட்டுக்கோட்டை, ஓமலூர், திருப்பரங்குன்றம், பண்ருட்டி, காங்கேயம் ஆகிய தொகுதிகளை தமாகா கேட்டதாக கூறப்படுகிறது. நாளை இரவுக்குள் தமாகா தலைவர் ஜிகே வாசன், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சைக்கிள் சின்னத்தை பெறுவதே எங்களுடைய தொடர் சட்ட முயற்சி என்றும் அது நடந்துகொண்டு இருக்கிறது எனவும் தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்திருந்தார். சைக்கிள் சின்னத்தில் போட்டியிடாத சூழல் ஏற்பட்டால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. கடந்த தேர்தலில் தென்னைமரத்திலும், நாடாளுமன்ற தேர்தலில் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…