இனி காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் – டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும்.கடித பரிமாற்றம் உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும்.
போலீஸ் வாகனங்கள் அனைத்திலும் தமிழில், “காவல் துறை” என இடம்பெற்றிருக்க வேண்டும் .வருகைப் பதிவேட்டில் கூட அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.