தமிழகத்தில் நிலுவையில் உள்ள 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் முடிவில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வுகள் அனைத்தும் ரத்து என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். மேலும், 12 ஆம் வகுப்புக்கான தேர்வு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…