மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதையடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் தற்போது மத்திய அரசு அறிவித்தபடி, மே 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பின்னர் அதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் நகராட்சி, மாநகராட்சி உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று கிராப்புறங்களில் தனி கடைகளுக்கு காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகளுக்கான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி என்றும் கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…