Tasmac Close [file image]
Tasmac Close : தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குத் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு.
2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் நாளை மாறு நாள் ( ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அந்த நாள் அதாவது ஏப்ரல் 19-ஆம் தேதி அரசு விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எப்போது விடுமுறை என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 17) முதல் வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருப்பதன் காரணமாக அன்றும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தான்.
அதைப்போல சென்னையில் வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட இருப்பதன் காரணமாக இந்த தேதிகளிலுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்து இருக்கிறார்.
மேலும், மக்களவை தேர்தல் நாளை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் நேற்றே மதுக்கடையில் கூட்டமாக மது பிரியர்கள். நிரம்பி வழிந்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கூட்டமாக வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…