புதுச்சேரியில் வீட்டு வாடகை கேட்டதால் உரிமையாளரை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாக்குமுடையான்பேட் ஜீவா காலனியில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் புதுச்சேரியில் சொந்தமாக கட்டிடத்தில் 5 வீடுகளை வைத்துள்ளார் அதில் ஒருவீட்டில் வசித்து வந்தார் மற்ற நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டார், மேலும் ஒரு வாடகை வீட்டில் அருண்குமார் என்பவர் வசித்து வந்தார், அருண்குமார் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்திவருகிறார்.
இந்த நிலையில் அருண்குமார் வீட்டுவாடகையை கடந்த சில மதங்களாகவே கொடுக்காமல் வந்துள்ளார், இதனால் அருணிற்கும் வீட்டின் உரிமையாளர் புருஷோத்தமனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் புருஷோத்தமன் நேற்று இரவு வீட்டு வாடகை வாங்குவதற்கு அருண்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது திடீரென வாய்தகராறு கை சண்டையாக மாறியது, இதனால் கோபமடைந்த அருண்குமார் வேகமாக வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து வீட்டின் உரிமையாளர் புருஷோத்தமனை குத்தியுள்ளார், இதனால் புருஷோத்தமன் துடிதுடிக்க கீழே விழுந்துள்ளார், புருஷோத்தமன் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கோரிமேடு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த புருஷோத்தமனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலிலே உயிரிழந்தார், மேலும் இது தொடர்பாக அருண்குமாரை காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …