அண்ணாவிற்கு பக்கோடா மிகவும் பிடிக்கும்- ஸ்டாலின் பேச்சு..!

திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, முன்னாள் முதலமைச்சர் அண்ணா ஓய்வு எடுக்க எந்த தொந்தரவு இல்லாமல் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் தூங்க வேண்டுமென்றால் திமுக மறைந்த பொதுச்செயலாளர் க. அன்பழகன் இல்லத்திற்கு செல்வார், இல்லையென்றால் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு வருவார். இதுதான் அண்ணாவின் பழக்கம் இதை நான் பார்த்திருக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்தார்.
கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு வரும்போது அண்ணா மிகவும் விரும்பி சாப்பிடுவது பக்கோடா, டீ-யை தான். அதுவும் ராயப்பேட்டையில் உள்ள அமீன் பக்கோடா விரும்பி சாப்பிடுவார். அண்ணாவிற்கு பக்கோடா, டீ வாங்க சில நேரங்களில் நான் நடந்து அல்லது சைக்களில் சென்று இருக்கிறேன். வீட்டில் பக்கோடா, டீ வாங்க 2 அல்லது 3 ரூபாய் கொடுக்கும் பணத்தில் எட்டணாவை நான் எடுத்து கொள்வேன் என திமுக தலைவர் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.